search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா
    X
    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

    அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது - அமித் ஷா குற்றச்சாட்டு

    கூட்டுறவுத் தொழில்களை விரிவுபடுத்த மத்திய அரசு விரும்புவதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனோவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    ஒரு காலத்தில் சுய ராஜ்ஜியம் என்ற சொல்லை பயன்படுத்த அச்சமாக இருந்தது. மன்னர் சிவாஜி தமது வாழ்நாளின் பெரும் பகுதியை இந்து சாம்ராஜ்யத்தை அமைப்பதற்கு பயன்படுத்தினார். அம்பேத்கர் சிலையும் இன்று திறக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் வாழ்ந்தபோதும், இறப்பிற்கு பின்னரும் அவரை அவமதிக்கும் சந்தர்ப்பங்களை காங்கிரஸ் கட்சி தவற விட்டதில்லை. 

    அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது மத்தியில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சி ஆட்சியின்போதுதான். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து வருகிறது.  

    இவ்வாறு அமித் ஷா தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

    முன்னதாக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமித் ஷா பேசியபோது, ‘கூட்டுறவுத் தொழில்களை விரிவுபடுத்த மத்திய அரசு விரும்புகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கூட்டுறவு உருவாக்கத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்த உள்ளோம்.  மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகம் இதற்கான பணிகளை தொடங்கி விட்டது.  கூட்டுறவுத்துறை தொடர்பான ஒரு புதிய திட்டமும் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார்.

    ===
    Next Story
    ×