search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து
    X
    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து

    கெஜ்ரிவால் ஒரு அரசியல் சுற்றுலா செய்யும் பொய்யர்- நவ்ஜோத் சித்து கடும் தாக்கு

    டெல்லியில் 8 லட்சம் பேருக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, வெறும் 440 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து கடுமையாக சாடியுள்ளார்.
    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி இருக்கும் நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.

    குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு சவால்விடும் வகையில், ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார்.

    தாங்கள் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். பஞ்சாப்பில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுப்பது மூலம் கிடைக்கும் பணம் எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பயன்படும் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

    கெஜ்ரிவாலின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக தாக்கி உள்ளார்.

    பஞ்சாப்பில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சித்து கூறியதாவது:-

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அரசியல் சுற்றுலாப் பயணி. மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக போலி வாக்குறுதிகளை அளிப்பவர். டெல்லியில் 8 லட்சம் வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் 440 மட்டுமே கொடுத்துள்ளார்.

    பஞ்சாபில் எங்கே என்றாலும் என்னுடன் வந்து உட்காருங்கள். என்னை டெல்லிக்கு கூட கூப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உட்காருங்கள், டிவி சேனல்களையும் கொண்டு வருவேன். நான் தோற்கடிக்கப்பட்டால் அரசியலை விட்டு வெளியேறுவேன்.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாக கூறும் கெஜ்ரிவால், அவரது கட்சி தலைமை தாங்கும் டெல்லியில் உள்ள பெண்களுக்கு இந்த தொகையை வழங்குகிறாரா ?

    பஞ்சாபில் மணல் கொள்ளை தடுப்பது மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வரும். கடந்த அகாலி-பாஜக ஒவ்வொரு ஆண்டும் ரூ.40 கோடி டெபாசிட் செய்தது. நாங்கள் ரூ.300 கோடி டெபாசிப் செய்கிறோம். கெஜ்ரிவாலுக்கு எப்படி ரூ.20,000 கோடி வருமானம் கிடைக்குமா ?

    மணல் கொள்ளை தடுப்பு மூலம் எந்த மாநிலம் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறதோ அதை எனக்குக் காட்டுங்கள். இது சாத்தியமில்லை.

    கெஜ்ரிவாலுக்கு ஒன்று சொல்கிறேன்.  உங்களுக்கு பஞ்சாப் பற்றி எதுவும் தெரியாது. நீங்கள் ஒரு அரசியல் சுற்றுலா. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு போலி வாக்குறுதிகளுடன் இங்கு வரும் பொய்யர். நீங்கள் ஏன் கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு வரவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

    Next Story
    ×