search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
    X
    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

    விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்

    விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    பின்னர், மேற்சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் வருண் சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    இந்நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங்

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், " குரூப் கேப்டன் வருண் சிங் பெருமை, வீரத்துடனும், மிகுந்த தொழில்முறையுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.

    தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்திய விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவை அறிந்து, வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன்.

    இறுதி மூச்சு வரை போராடிய உண்மையான போராளி. எனது எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. இந்த துயர நேரத்தில் நாங்கள் குடும்பத்துடன் உறுதியாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    Next Story
    ×