search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் வரி
    X
    நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் வரி

    3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ. 8 லட்சம் கோடி வருமானம்: நிர்மலா சீதாராமன்

    கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மத்திய அரசு ரூ.8 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு ஈட்டிய வருமானம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

    அதில், கடந்த மூன்று  நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மத்திய அரசு ரூ.8 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதில் ரூ.3.71 லட்சம் கோடி கடந்த 2020-2021 நிதியாண்டில் மட்டும் வசூலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ல், லிட்டருக்கு ரூ.19.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி, கடந்த மாதம் நவம்பர் 4-ம்தேதி வரை ரூ. 27.90- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல டீசல் மீதான கலால் வரி ரூ.15.33-ல் இருந்து ரூ.21.80-ஆகவும் உயர்ந்துள்ளது.

    இருப்பினும் இதே காலக்கட்டத்தில்  2018 அக்டோபர் 5-ல், ரூ.19.48-ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி 2019 ஜூலை 6-ந்தேதி  வரை ரூ.17.98-ஆகவும், டீசல் மீதான வரி ரூ.15.33-ல் இருந்து ரூ.13.83-ஆக குறைக்கப்பட்டது.

    அதன்பின் 2021 பிப்ரவரி 2-ல் இருந்து  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.32.98 ஆகவும் ரூ.31.83 ஆகவும் உயர்ந்து, பின் 2021 நவம்பர் 4-ம்தேதியின்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 27.90 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 21.80-ஆக குறைக்கப்பட்டது.

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியின் மூலம் 2018-2019 நிதியாண்டில் ரூ. 2,10,282 கோடியும், 2019-2020 வரை ரூ. 2,19,750 கோடியும், 2020-2021 வரை ரூ. 3,71,908 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் 4-ம் தேதி தீபாவளியின்போது மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 வீதம் குறைத்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×