search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி
    X
    பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற பேச்சுவார்த்தை - மத்திய அரசு தகவல்

    எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    கடும் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தை நடத்துவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. இன்று காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் 50 எம்.பி.க்கள் கேள்வி நேரத்தின் போது விவாதிக்க கோரிக்கை விடுத்து நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.  அவை தலைவர் 26 எம்.பி.க்களுக்கு அனுமதி வழங்கினார்.  

    பாராளுமன்ற மாநிலங்களவை


    திரிணாமுல் காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதாதள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்பட பிற கட்சிகள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டன.   எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. நான் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட மற்றவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். 

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக அந்த எம்.பிக்களிடம் தனித்தனியாக அரசு பேசி வருகிறது.  நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். அவர்கள் குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். 

    இவ்வாறு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×