search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தடுப்பூசி செலுத்தும் பணி
    X
    தடுப்பூசி செலுத்தும் பணி

    போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    கொரோனா போலி தடுப்பூசி போடப்படுவதை தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. 

    நாடு முழுவதும் இதுவரை 86 சதவீகிதத்திற்கும் அதிகமான தகுதி படைத்தோருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கொரோனா போலி தடுப்பூசி முகாம்களை நடத்தியது, மற்றும் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு  மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    இது போன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் தடுக்க, சட்டப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். 
     
    கொரோனா போலி தடுப்பூசிகளை தடுக்க தடுப்பூசி விநியோக முறை , தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் மற்றும் தடுப்பூசியின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்  தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×