search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜேஷ் தோபே
    X
    ராஜேஷ் தோபே

    ஊரடங்கு பற்றி யோசிக்கவில்லை: மந்திரி ராஜேஷ் தோபே

    ஒமைக்ரான் பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த சந்தேகத்திற்கு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது. தினந்தோறும் சுமார் 70 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 1,000 பேர் உயிரிழந்தனர். மேலும் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 7 லட்சத்தை நெருங்கியது. இதையடுத்து ஏப்ரல் மாநிலத்தில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.

    தற்போது மாநிலத்தில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகிறது. தினசரி பலி எண்ணிக்கை சுமார் 50 ஆக உள்ளது.

    இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகிற்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்தது. குறிப்பாக மராட்டியத்திலும் 10 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதில் கல்யாண் டோம்பிவிலியை சேர்ந்த என்ஜினீயர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த சந்தேகத்திற்கு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " தற்போது மாநிலத்தில் எந்த வகையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் நாங்கள் யோசிக்கவில்லை. மாநில பணிக்குழு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி உள்ளது. நாங்கள் ஒமைக்ரான் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் மத்திய அரசு, மாநில பணிக்குழு மற்றும் முதல்-மந்திரியின் வழிகாட்டுதலுடன் கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் " என்றார்.
    Next Story
    ×