search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற மத்திய மந்திரிகள்
    X
    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற மத்திய மந்திரிகள்

    உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால்... எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி

    பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நடந்தது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 29-ந்தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க நாளில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதா இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதே போல மேலும் பல மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

    வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் 12 மேல்சபை எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரியும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன.

    பாராளுமன்ற வளாகத்திலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாகாலாந்து பிரச்சனையை நேற்று கிளப்பினார்கள்.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த கூட்டம் நடந்தது.

    இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, பியூஸ் கோயல், ஜெய்சங்கர், பிரகலாத் ஜோஷி, ஜிதேந்திரசிங் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை, மேல்சபையில் உள்ள அனைத்து பா.ஜனதா எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர்.

    மாநிலங்களவை

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற கூட்டத்துக்கு பா.ஜனதா எம்.பி.க்கள் வருகை குறைந்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி, ஏற்கனவே தங்களது கட்சி எம்.பி.க்களை எச்சரித்து இருந்தார். இந்தநிலையில் அவர் மீண்டும் இன்றைய கூட்டத்தில் எம்.பி.க்களுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

    உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படும் என்று எச்சரித்தார். இதுதொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தில்
    பிரதமர் மோடி பேசியதாவது:-

    தயவுசெய்து பாராளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இதை பற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உங்களை குழந்தைகளை போல நடத்துவது நல்லதல்ல. நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி செய்யாவிட்டால் சரியான நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

    இவ்வாறு மோடி பேசினார்.



    Next Story
    ×