search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய ரவி நாயக்
    X
    கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய ரவி நாயக்

    கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ரவி நாயக் விலகல்: பா.ஜ.கவில் இணைய முடிவு?

    வரும் 2022-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சியில் இருந்து பலரும் வெளியேறுவதால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பனாஜி:

    கோவா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் இம்முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், போன்டா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரவி நாயக் தனது பதவியில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

    பா.ஜ.க-காங்கிரஸ் கட்சி

    ரவி நாயக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதை அடுத்து, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.கவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படியுங்கள்.. ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்
    Next Story
    ×