search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    இந்தியாவில் 85 சதவீத தகுதிவாய்ந்த மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

    இந்தியாவில் இதுவரை 128 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 128.86 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    நாட்டில் ஒரே நாளில் இன்று 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. 325-வது நாளான இன்று செலுத்திய தடுப்பூசி எண்ணிக்கையால், மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 128.66 கோடி ஆக உயர்ந்து உள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவில் 85 சதவீத தகுதிவாய்ந்த பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×