search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்
    X
    ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார்

    இங்கே மூச்சு முட்டினால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - பரூக் அப்துல்லா மீது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாய்ச்சல்

    ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறை நடப்பதாக கூறி தேசிய தலைநகரில் போராட்டம் நடத்திய பிடிபி தலைவர் மெகபூபா முப்தியையும் இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்தார்.
    ஜம்மு:

    தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் 116வது பிறந்தநாளையொட்டி நேற்று ஸ்ரீநகரில் உள்ள நசீம்பாக் நினைவிடத்தில் கட்சியின் இளைஞரணி மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின்  தலைவர் பரூக் அப்துல்லா, வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து தியாகம் செய்ததைப் போல, ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தையும் சிறப்பு அந்தஸ்தையும் மீட்டெடுக்க ஜம்மு-காஷ்மீர் மக்கள் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்று  தெரிவித்தார். தனது கட்சி வன்முறையை ஆதரிக்காது என்றும் கூறினார்.

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்று பரூக் அப்துல்லா பேசியதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பரூக் அப்துல்லாவின் பேச்சு வன்முறையை விரும்புவதுபோல் தெரிகிறது, அமைதியை விரும்புவது போல் தெரியவில்லை என்றும் கூறி உள்ளார்.

    பரூக் அப்துல்லாவுக்கு இந்தியாவில் மூச்சு முட்டுவது போல் நினைத்தால், நாட்டை விட்டு வெளியேறி உலகில் அவர் விரும்பும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழலாம் என்றும் இந்திரேஷ் குமார் கூறினார். 

    இதேபோல், ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறை நடப்பதாக கூறி தேசிய தலைநகரில் போராட்டம் நடத்திய பிடிபி தலைவர் மெகபூபா முப்தியையும் இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்தார். பொய்களை சொல்வது மெகபூபாவுக்கு ஒரு பேஷன் ஆகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×