search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்கூட்டர் எண்
    X
    ஸ்கூட்டர் எண்

    நம்பர் பிளேட்டில் ‘S EX’ எழுத்து: சங்கடத்திற்கு உள்ளான டெல்லி பெண்- அடுத்து நடந்தது என்ன?

    ஸ்கூட்டர் மற்றும் சீரியல் நம்பருடன் இணைந்து செக்ஸ் என வருவதால் இளம் பெண் ஒருவர் சங்கடத்திற்குள்ளாகி மகளிர் ஆணையத்தை நாடியுள்ளார்.
    வாகனத்திற்கு பேன்சி எண் வாங்குவதற்காக சிலர் பணம் செலவழிப்பது உண்டு. சில நேரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழங்கப்படும் எண்  சிலருக்கு தானாகவே பிறரை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துவிடும். ஆனால் ஒரு சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.

    அதுபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. டெல்லியில் வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் DL என டெல்லி மாநிலத்தை குறிக்கும் எழுத்தும், அதன்பின் மாவட்டத்திற்கான நம்பர், அதன்பின் ஸ்கூட்டி என்பதற்கு ‘S’ எழுத்தும் வழங்கப்படும்.

    அதன் A to Z வரை ஒரே நம்பர் வழங்கப்படும். அதன்பின் AA எனத் தொடரும். இதுபோன்று பெண் ஒருவருக்கு வந்த சீரியலில் DL 3S EX என நம்பர் பிளேட் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் செல்லும்போது ‘SEX’ என புரிந்து கொள்ளப்பட்ட அருகில் உள்ளவர்களால் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து பார்ப்போம்....

    தீபாவளியையொட்டி புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கிய அந்த பெண் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்  விண்ணப்பித்து பதிவெண்ணை பெற்றுள்ளார். அந்த பதிவெண்தான் தற்போது அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஸ்கூட்டரின் நம்பர் பிளேட்டில் அந்த பதிவெண் ஒட்டப்பட்டபோது அது செக்ஸ் (SEX) என்ற வார்த்தையை பிரதிபலிப்பது போல் அமைந்து விட்டது.

    இதனால் ஸ்கூட்டரில் வெளியே செல்லும்போது வாகன பதிவெண்ணை பார்க்கும் ஆண்கள் அவரை பின்தொடர்ந்து தொல்லை தருவதாகவும், இதனால் தாம் கிண்டல்  கேலிக்கு ஆளாவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பக்கத்து வீட்டுக்காரர்களும் கிண்டல் செய்துள்ளனர்.  இதனால் அத்தியாவசிய தேவைக்காக கூட அந்த ஸ்கூட்டரில் வெளியே செல்ல முடியவில்லை என்றும் அந்த பெண் கூறியுள்ளார். 

    இதனால் விரக்தியடைந்த அந்த பெண், எப்படியாவது தீர்வு காண வேண்டும் என நினைத்து இறுதியாக டெல்லி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போக்குவரத்து துறைக்கு  டெல்லி  மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  உடனடியாக அந்த ஸ்கூட்டர் பதிவெண்ணை மாற்றி தருமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், இதேபோன்ற பதிவெண் வரிசை கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதுதொடர்பான புகார்கள் குறித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு டெல்லி போக்குவரத்து துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×