search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    சில ஊடகங்கள் எங்களை வில்லன்களாக சித்தரிக்கின்றன: உச்ச நீதிமன்றம் காட்டம்

    டெல்லியில் காற்று மாசு பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடிய விவகாரத்தில், சில ஊடகங்கள் தங்களை வில்லன்களாக சித்தரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மாதம் 13-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

    பிறகு, காற்று மாசு சற்று குறைந்ததாக தெரிவித்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த 29-ம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கின.

    ஆனால், மீண்டும் காற்று மாசுவின் அளவு அதிகரித்ததால் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்படும் என அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், டெல்லியில் பள்ளிகள் மூடும் விவகாரத்தில், சில ஊடகங்கள் தங்களை வில்லனாக சித்தரிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் அளித்த புகாரில், "உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய விசாரணை ஆக்ரோஷமான போராக இருந்தது. மேலும், நீதிமன்றம் நிர்வாக கடமையை எடுத்துக்கொள்ள அச்சுறுத்துவதுப்போல் இருந்தது " எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகார் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், " அதை நாங்கள் கவனித்தோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. நாங்கள் பள்ளிகளை மூட விரும்புவதுபோல் சில ஊடகங்கள் எங்களை வில்லன்களாக காட்ட முயற்சிக்கின்றன.

    நீங்கள்தான் (டெல்லி அரசு) பள்ளிகளை மூடுகிறோம், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொன்னீர்கள். ஆனால், இன்றைய செய்தித்தாள்களில் நாங்கள் உத்தரவிட்டதுபோல் தெரிவிக்கப்பட்டுள்ளது " என்றனர் காட்டமாக...

    இதையும் படியுங்கள்.. டெல்லியில் காற்று மாசு உயர்வு எதிரொலி - பள்ளிகள் மீண்டும் மூடல்
    Next Story
    ×