search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்ஆப்பிரிக்கா உள்பட வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்தவர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை

    ஒமைக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதித்த அந்த 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா உள்பட வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த 2 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு  ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    அதில் ஒருவர் 66 வயது ஆண். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக கர்நாடகா வந்துள்ளார்.  மற்றொருவர்  46 வயது ஆண். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடைபெற்ற  பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்கா உள்பட வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்த 9 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உளளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9 ஆயிரத்து 216 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
    Next Story
    ×