search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நக்மா தலைமையில் போராட்டம்

    டெல்லியில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதை கண்டித்து அம்மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் காங்கிரஸ் மகளிர் அணி

    இதில், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தடுப்புகள் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு தீபாவளிக்கு முந்தைய தினம் பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ. 10-ம் குறைத்தது. ஆனால் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்துவிட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு எரிபொருள் விலை குறையவில்லை.

    இதையும் படியுங்கள்.. சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி
    Next Story
    ×