search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி
    X
    காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

    விவசாயிகள் விவகாரம்: ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

    பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, "வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல், "போராட்டத்தின்போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி" மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.

    தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., பினோய் விஸ்வம், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

    இதையும் படியுங்கள்..  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது


    Next Story
    ×