search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கேரளாவில் மழை நீடிப்பு- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    கேரளாவில் வருகிற 2-ந்தேதி முதல் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பம்பை நதி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உள்ளன.

    இந்த நிலையில் திருவனந்தபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இன்று பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் நாளை காசர்கோடு தவிர மாநிலத்தில் உள்ள பிற 13 மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் மழை

    கேரளாவில் வருகிற 2-ந்தேதி முதல் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள், வருவாய்த்துறை மற்றும் மீட்புத்துறையினர் 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


    Next Story
    ×