search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பிரதமர் மோடியுடன் நாளை மம்தா பானர்ஜி சந்திப்பு

    டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக நேற்று டெல்லிக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    நாட்டில் ஜனநாயகம் பா.ஜனதா ஆட்சியில் எலும்புக்கூடாக உள்ளது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மத்திய அரசு அழித்து வருகிறது. மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தும் முயற்சியை ஏற்க மாட்டேன்.

    எனது டெல்லி பயணத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறேன். மாநிலம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பேன். மேலும் எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) அதிகார வரம்பை அதிகரிப்பது குறித்தும், திரிபுரா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை பற்றியும் பிரதமரிடம் பேசுவேன்.

    எல்லை பாதுகாப்பு படை எங்களுக்கு விரோதி அல்ல. அவர்களும் எங்கள் நண்பர்கள்தான். ஆனால் பி.எஸ்.எப். பாதுகாப்பாக இருந்தால் நாமும் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பா.ஜனதா கணக்கிடுகிறது.

    எல்லா அமைப்புகளுக்கும் அதன் தனிப்பட்ட குணநலன்கள் இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு என்பது மாநில விவகாரம் ஆனால் பி.எஸ்.எப். போன்ற முகமைகளை பா.ஜனதா தனது கட்சியினர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறது.

    எங்களது நிலத்தை வலுக்கட்டாயமாக யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டேன்.

    திரிபுரா மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு இடமில்லை. அங்கு நடைபெற்ற வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு பா.ஜனதா அரசு அடிப்படை சிகிச்சை அளிக்கக்கூட மறுக்கிறது. இதில் மனித உரிமை ஆணையம் கவனிக்காமல் இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். முதல்வரும், மாநிலத்தில் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் திரிபுரா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மீறப்படுகிறது. இதில் நீதித்துறை தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    அப்போது பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மம்தா பானர்ஜி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபடுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×