search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    வேளாண் சட்டங்கள் வாபஸ்: நாடுமுழுவதும் காங்கிரஸ் இன்று வெற்றி ஊர்வலம்

    காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்தது போலவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

    விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்று உள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்த போது, “இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றனர்.

    இதேபோல காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்தநிலையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி வெற்றி பேரணிகளை நடத்த முடிவு செய்தது.

    கோப்பு படம்

    மேலும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மெழுகு வர்த்தி அணிவகுப்பும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால் கூறும்போது, “அனைத்து மாநில கட்சி பிரிவுகளும் பேரணிகள் மற்றும் மெழுகு வர்த்தி அணிவகுப்புகளை மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் நடத்துமாறு கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் வரலாற்று வெற்றியாக கருதி தேசத்துடன் இணைந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் விவசாயிகளின் வெற்றி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி இன்று அவர்கள் பேரணிகளை நடத்தினார்கள். வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நடனமாடி உற்சாகமாக சென்றனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது.

    விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்தனைகளையும் செய்தனர்.

    இதையும் படியுங்கள்... சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை டோனி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    Next Story
    ×