search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா செயற்குழுவில் மோடிக்கு வரவேற்பு
    X
    பா.ஜனதா செயற்குழுவில் மோடிக்கு வரவேற்பு

    டெல்லியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது

    தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இன்று காலை பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது.
    டெல்லி, என்டிஎம்சி மாநாட்டு மைதானத்தில் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.-வின் முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இதற்கிடையே, லக்னோவில் இருந்து காணொலி மூலம் கலந்துக்கொள்ள இருந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி விரைந்து கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

    முரளி மனோகர் ஜோஷி

    கூட்டத்தில், கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்த அனைவரின் நினைவாக இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    ஜே.பி. நட்டாவின் தொடக்க உரையுடன் தொடங்கிய இக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடியின் பாராட்டு உரையுடன் நிறைவடைகிறது.
    Next Story
    ×