search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மாறி வரும் போர் முறைகள்... ராணுவ திறனை அதிகரிக்க வேண்டியது அவசியம் -பிரதமர் மோடி பேச்சு

    எல்லையில் ராணுவ வீரர்கள் உள்ளதாலேயே 130 கோடி மக்களும் நிம்மதியாக உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி, அவர்களுடன் கலந்துரையாடினார். 

    இந்நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் மோடி,  எல்லையில் ராணுவ வீரர்கள் உள்ளதாலேயே 130 கோடி மக்களும் நிம்மதியாக உள்ளனர் என்றும்,  பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாட ராணுவ வீரர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் பேசினார். 

    பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    நான் தீபாவளியை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட விரும்புகிறேன். அதனால் இந்த பண்டிகையில் உங்களுடன் கலந்துகொள்கிறேன். 

    ராணுவ வீரர்களின் தியாகம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது. வீரர்களின் திறமையும் வலிமையும் நாட்டிற்கு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின்போது இங்கு உள்ள ராணுவ பிரிவு ஆற்றிய பங்கு பாராட்டுக்குரியது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்குப் பிறகு இங்கு பயங்கரவாதத்தை பரப்ப பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.  

    மாறிவரும் உலகம் மற்றும் போர் முறைகளுக்கு ஏற்ப நமது நாடும் தனது ராணுவ திறன்களை அதிகரிக்க வேண்டியது அவசியம். 

    வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி

    லடாக்கிலிருந்து அருணாச்சலப் பிரதேசம், ஜெய்சால்மர் முதல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை... என எல்லைப் பகுதிகளில் இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு, நாடு பாதுகாப்புத் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அரசாங்கத்தின் முயற்சிகளால் உள்நாட்டு உற்பத்தி  திறன்கள் ஊக்கம் பெற்றுள்ளன. 

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×