search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க வந்த ஷியாம் சரண் நேகி
    X
    வாக்களிக்க வந்த ஷியாம் சரண் நேகி

    மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தல் - 104 வயது வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

    இந்தியா விடுதலையடைந்து 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் நபராக வாக்களித்து, தொடர்ந்து 33-வது முறையாக நேற்று வாக்களிக்க வந்த 104 வயது நபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ஷிம்லா:

    இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பா.ஜ.க. கட்சிகள் இடையே பலப்பரீட்சை நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்தது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவரும், மூத்த வாக்காளரான 104 வயதான ஷியாம் சரண் நேகி, நேற்று தனது முக்கிய கடமையான வாக்கை பதிவு செய்தார்.

    இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மாண்டி மக்களவை தொகுதியின் கின்னார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கை பதிவு செய்தார். மூத்த வாக்காளரான அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது கடமையை சரிவர செய்யவேண்டும் என்றார்.

    இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்களித்துள்ளார். அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நேகி தனது வாக்கை தவறாமல் பதிவு செய்துள்ளார். அவர் இதுவரை 16 பாராளுமன்ற தேர்தல்களிலும், 14 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். 

    Next Story
    ×