search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    105 கோடியை தாண்டியது... தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல் கல்

    நாடு முழுவதும் இன்று 51.59 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இந்த சாதனை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    அதன்பின்னரும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை இன்று 105 கோடியை தாண்டியது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 51.59 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வெற்றிகரமாக 105 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி இயக்கம் புதிய சாதனையை எட்டியிருப்பதால் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×