search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வகுப்பறை
    X
    பள்ளி வகுப்பறை

    31ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளை அறிவித்தது மேற்கு வங்காள அரசு

    திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்டுகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் 70 சதவீதம் நபர்களை அனுமதிக்கலாம்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி முதல்  கூடுதல் தளர்வுகளை மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் நவம்பர் 16ம்தேதி திறக்கலாம். 

    உள்ளூர் ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம். திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்டுகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் 70 சதவீதம் நபர்களை அனுமதிக்கலாம்.

    காளி பூஜை, தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2 முதல் 5ம் தேதி வரையிலும், சாத் பூஜைக்காக நவம்பர் 10ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
    Next Story
    ×