search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சக்திகாந்த தாஸ்
    X
    சக்திகாந்த தாஸ்

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியின் கவர்னராக  2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசின்  பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான இவர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர். தமிழக கேடர் ஆபீஸராகப் பணியாற்றியவர். மத்திய அரசு பணிகளுக்கு 2008-ம் ஆண்டு சென்ற இவர், அதற்கு முன்பு தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

    ரிசர்வ் வங்கி

    இந்தநிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர்  பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10-ம் தேதியுடன் முடிவிருந்த நிலையில் மத்திய அரசு பதவிகாலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. 


    Next Story
    ×