search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிஷ் மிஸ்ரா
    X
    ஆசிஷ் மிஸ்ரா

    டெங்கு உறுதியானதால் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிறை மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை

    மருத்துவமனையில் சுதந்திரமாக சுற்றிய வீடியோ வெளியான நிலையில், ஜெயில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் ஆசிஷ் மிஸ்ரா.
    லக்கிம்பூர் போராட்டத்தின்போது விவசாயிகளை காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து, சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது கார் ஏற்றி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிஷ் மிஸ்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு  டெங்கு காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட்டது. மேலும் சில பரிசோதனைகளுக்காக லக்கிம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதைதொடர்ந்து, மாவட்ட மருத்துவமனையில் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பில் ஆசிஷ் மிஸ்ரா ஆரோக்கியமான உடல் நிலையில் கைவிலங்கிடப்படாமல் சுதரந்திரமாக நடக்கும் வீடியோவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தலைமை நீதிமன்ற நீதிபதிக்கு காண்பித்தனர்.

    இதையடுத்து, தலைமை நீதிமன்ற நீதிபதி சிந்தாராம், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிறை மருத்துவமனையில் கிசிச்சை அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, வரும் வியாழக்கிழமைக்குள் (நாளை) பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு சிறைக் கண்காணிப்பாளர் மற்றும்  தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இதற்கு, தலைமை மருத்துவ அதிகாரி பதில் அளித்ததை அடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்குள்ள சிறை மருத்துவமனையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×