search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசவராஜ் பொம்மை
    X
    பசவராஜ் பொம்மை

    சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சி: பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு

    கடந்த சட்டசபை தேர்தலில் சாதிகளை உடைக்க முயன்றதால், சித்தராமையாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருந்தார்கள். ஆனாலும் சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.
    பெங்களூரு :

    ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரசாரத்தின் போது நிருபர்களிடம் கூறியதாவது;-

    காங்கிரஸ் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயம் வந்து விட்டது. இடைத்தோ்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதை பற்றி அறிந்த சித்தராமையா இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பா.ஜனதாவின் வெற்றியை தடுக்க பல்வேறுமுயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக தான் சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த சித்தராமையா முயற்சிக்கிறார்.

    அவரது அரசியல் ஆதாயத்திற்காக சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார்.சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலேயே சித்தராமையா அரசியல் செய்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் சாதிகளை உடைக்க முயன்றதால், சித்தராமையாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருந்தார்கள். ஆனாலும் சாதிகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

    சிறுபான்மையினர் சமுதாயத்திலும் உள் சாதியை தேடும் முயற்சியில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார். 5 ஆண்டுகளாக சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஹாவேரி மாவட்டத்திற்கு எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அவர் செய்து கொடுத்த வளர்ச்சி பணிகள் என்ன? என்பதை சித்தராமையா தெரிவிக்க வேண்டும்.

    ஹனகல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், மந்திரியாக இருந்த போது சி.எம்.உதாசி செய்த வளர்ச்சி பணிகள் ஏராளம். ஏராளமான நீர்ப்பாசன திட்டங்களை இந்த தொகுதிக்கு கொடுத்துள்ளார். நான் கம்பிளி அணிந்த விவகாரத்திலும் சாதி பற்றி சித்தராமையா பேசி இருக்கிறார். நான் இந்த மாநில முதல்-மந்திரி. எனக்கு அனைத்து சமுதாய மக்களும் சமமானவர்கள் தான். எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    Next Story
    ×