search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வகுப்பறை
    X
    பள்ளி வகுப்பறை

    மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

    சிலிகுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பேசியபோது பள்ளி, கல்லூரிகளை திறக்கும் தேதியை முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில்  பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 

    சிலிகுரி மாவட்டம் உத்தர் கன்யாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் பேசியபோது தலைமைச் செயலாளரிடம் முதல்வர் மம்தா பானர்ஜி இத்தகவலை தெரிவித்தார். பள்ளிகளை திறப்பதற்கு முன், பள்ளிகளில் சுத்தம் செய்தல் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதன்மூலம் 20 மாத இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக நவம்பர் 15ம் தேதி கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என மம்தா கூறியிருந்தார். ஆனால், அன்றைய தினம் பழங்குடி சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாளையொட்டி அரசு விடுமுறை என்பதால், நவம்பர் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கூறினார். 
    Next Story
    ×