search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் வெற்றி
    X
    பாகிஸ்தான் வெற்றி

    கல்லூரிகளில் கிரிக்கெட் ஒளிபரப்பு: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

    தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் கைது செய்ய பஞ்சாப் மாநில முதல் சரண்ஜித் சிங் சன்னி உத்தரவிட்டுள்ளார்.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் சங்ரூர் என்ற இடத்தில் பாய் குர்தாஸ் இன்டிடியூட் என்ற என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காஷ்மீர், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். அவர்கள் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தனர்.

    நேற்று இரவு இந்தியா- பாகிஸ்தான் மோதிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. அதன் நேரடி ஒளிபரப்புகளை விடுதி மாணவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இந்த விடுதியில் 90 காஷ்மீர் மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தனியாக ஆங்காங்கே அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர்.

    போட்டி நடந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அணி ரன் எடுத்த போதெல்லாம் காஷ்மீர் மாணவர்கள் அதை வரவேற்கும் வகையில் கூச்சல் போட்டனர்.

    பாகிஸ்தான் அணி வீரர்கள்

    அதன் பிறகு இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. உடனே காஷ்மீர் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது மற்ற மாநில மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாணவர்கள் ஒன்றாக திரண்டு சென்று காஷ்மீர் மாணவர்களை தாக்கினார்கள். இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. காஷ்மீர் மாணவர்களின் விடுதி அறைகளில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.

    உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவர்களை கட்டுப்படுத்தினார்கள்.

    இதே போல பஞ்சாப் மாநிலத்தில் ஹரார் என்ற இடத்தில் ராயட் பாரத் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கும் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடினார்கள். அவர்கள் மீது மற்ற மாநில மாணவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து 2 கல்லூரிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி வெளியிட்டுள்ள செய்தியில், “காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடப்பது வருத்தத்துக்குரியது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.

    Next Story
    ×