search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்- மம்தா வலியுறுத்தல்

    கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    கொல்கத்தா:

    கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

    கொரோனா தொற்று

    இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: -

    மேற்கு வங்காளத்தில் துர்கை பூஜை முடிந்த பிறகு, கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    காளி பூஜை, தீபாவளி, சத் பூஜை மற்றும் ஜகதாத்திரி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால், கொரோனா தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அதனால், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும்படி முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசத்தை தவிர மற்ற பாதுகாப்பு நெறிமுறைகளையும் மக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இதைத்தவிர, கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால்,  அனைத்து பகுதிகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×