search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதிர் ரஞ்சன்
    X
    ஆதிர் ரஞ்சன்

    மம்தா பானர்ஜி மோடியின் இடைத்தரகர்: காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர், மம்தா- மோடியை இணைத்து பேசியுள்ளார்.
    பா.ஜனதா இரண்டு முறை  தொடர்ச்சியாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். காங்கிரஸ் கட்சியால் பா.ஜனதாவுக்கு சமமாக போட்டியிட முடியவில்லை.

    மேற்கு வங்காள முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இவர் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார்.

    சமீபத்தில் முடிவடைந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தாவுக்கு பா.ஜனதா கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி மெஜாரிட்டியாக வெற்றி பெற்றார்.

    இந்திய அளவில் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்க்கும் ஒரே எதிர்க்கட்சி தலைவராக மம்தா உள்ளார். இப்படி இருந்த போதிலும் மம்தா-மோடியை இணைத்து டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    மோடி-மம்தா பானர்ஜி

    இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாக மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுக்கு உதவி செய்து வருகிறார். அவர் பிரதமர் மோடிக்கு இடைத்தரகராகி கொண்டிருக்கிறார். டெல்லி அவர்களுடையது, கொல்கத்தா மம்தா பானர்ஜியுடையது என இரண்டு பேரும் ஒப்பந்தம் போட்டதுபோல் தெரிகிறது. இல்லையெனில் காங்கிரஸ் பற்றி தேவையில்லாததை பற்றி பேசியிருக்கமாட்டார்’’ என்றார்.

    Next Story
    ×