search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மத்திய பிரதேசத்தில் பரவும் உருமாற்ற வைரஸ் - நாடு முழுவதும் உஷார் நடவடிக்கை

    வேகமாக தொற்றும் ஆற்றல் கொண்டது மத்திய பிரதேசத்தில் பரவும் உருமாற்ற வைரஸ் நாடு முழுவதும் உஷார் நடவடிக்கை
    இந்தூர்:

    கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்து இருக்கிறது. அதில் ஒரு சில உருமாற்ற வைரஸ்கள் வீரியம் கொண்டதாக இருக்கின்றன.

    அந்த வகையில் 2 முறை உருமாற்றம் அடைந்து டெல்டா வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக மாறியது. அதுதான் இந்தியாவில் 2-வது அலையை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. அதற்கு ஏஒய் 4.2 என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

    அந்த வைரசை பகுப்பாய்வு செய்ததில் அது அதிக வீரியமாக பரவக் கூடியது என்று தெரிய வந்துள்ளது. எனவே இங்கிலாந்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போல அமெரிக்காவிலும் இதே வைரஸ் பரவி உள்ளது.

    கொரோனா வைரஸ்

    இதனால் அமெரிக்காவும் உஷார் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. அது வெளிநாட்டு பயணிகள் மூலமாக இந்தியாவில் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.

    இந்தநிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உருமாற்றம் அடைந்த ஏஒய்.4.2 என்ற வைரஸ் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேருக்கு அது பரவி இருக்கிறது.

    அங்குள்ள ராணுவ கண்டோன்மெண்ட் அருகே இருப்பவர்களுக்குத்தான் ஏஒய்.4.2 வைரஸ் பரவி உள்ளது. இதுவும் அதிக வீரியம் கொண்டதாவும், பரவும் ஆற்றம் அதிகம் கொண்டதாகவும் உள்ளது.

    இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் புதிய வைரஸ் பரவி இருக்கும் நிலையில் அது தொடர்புடைய வைரஸ் இந்தியாவிலும் பரவி இருப்பதால் நாடு முழுவதும் உஷார் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது. ஏஒய்.4.2 வைரஸ் தொடர்பாக இந்திய மத்திய ஆராய்ச்சிக் கழகத்தில் தொடர்பு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    Next Story
    ×