search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மேற்கு வங்கம் உள்பட 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு

    நாடு முழுவதும் நேற்று 77,40,676 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,909, மகாராஷ்டிராவில் 1,701, தமிழ்நாட்டில் 1,140 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மேற்கு வங்கத்தில் புதிதாக 974 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்கும் குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தசரா திருவிழா, துர்கா பூஜையில் கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் கூடியதாக கூறப்படுகிறது. இதுவும் அங்கு
    கொரோனா
    பரவல் மீண்டும் அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு வங்கத்தில் 28 சதவீத பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

    இதேபோல அசாமில் கடந்த ஒரு வாரத்தில் 50 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 38 சதவீதமும் பாதிப்பு அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

    நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரத்து 468 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பால்
    மேலும் 561 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் நேற்று 65 பேர் மற்றும் விடுபட்ட பலி எண்ணிக்கை என மொத்தம் 464 மரணங் கள் அடங்கும்.

    மொத்த பலி எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,998 பேர் அடங்குவர்.

    கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 16,479 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 48 ஆயிரத்து 605 ஆக உயர்ந்தது. தற்போது 1,72,594 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தடுப்பூசி செலுத்தப்படும் காட்சி.

    நாடு முழுவதும் நேற்று 77,40,676
    தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று 13,40,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 59.97 கோடியாக உயர்ந்துள்ளது.


    Next Story
    ×