search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிஷ் மிஸ்ரா
    X
    ஆசிஷ் மிஸ்ரா

    லக்கிம்பூர் கலவர வழக்கில் கைதான ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு பரிசோதனை

    லக்கிம்பூர் மாவட்டத்தில் நடந்த கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சந்தேகிப்பதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது கார் ஏற்றி 4 விவசாயிகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளியாக மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், லக்கிம்பூர் கேரி மாவட்ட சிறையில் இருக்கும் ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து லக்கிம்பூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் பி.பி.சிங் கூறுகையில்,  “ஆசிஷ் மீஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால், அவரை சிறையில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மிஸ்ராவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகுதான் ஆசிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பது உறுதியாகும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×