search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா

    தினசரி பாதிப்பை விட கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக இருந்து வரும் நிலையில் நேற்று 17,677 பேர் நலம் பெற்றுள்ளனர்.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 562 ஆக உயர்ந்தது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 9,361, மகாராஷ்டிராவில் 1,632, தமிழ்நாட்டில் 1,152 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனாவால் மேலும் 666 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் நேற்று 99 பேர் மற்றும் விடுபட்ட பலி எண்ணிக்கை 464 என 563 மரணங்கள் அடங்கும்.

    மொத்த பலி எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,965 பேர் அடங்குவர்.

    தினசரி பாதிப்பை விட அதன் பாதிப்பில் இருந்து குணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக இருந்து வரும் நிலையில் நேற்று 17,677 பேர் நலம் பெற்றுள்ளனர்.

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,73,728 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் காட்சி.


    நாடு முழுவதும் நேற்று 68,48,417 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 101 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 13,64,681 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 59.84 கோடியாக உயர்ந்துள்ளது.


    Next Story
    ×