search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    திருப்பதியில் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு நிறைவு

    நடைபாதையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் நேரடியாக வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசனத்திற்கான 6 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

    இந்த தரிசன டிக்கெட்டுகள் 90 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

    தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக ஒரே நேரத்தில் 7 லட்சம் பக்தர்கள் முயற்சி செய்தனர். இதனால் சிறிது நேரம் சர்வரில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டன

    இதேபோல் இன்று காலை 9 மணிக்கு நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான 7 லட்சத்து 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இந்த மாதம் வரை 8000-ஆக இருந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல ரூ.300 தரிசன டிக்கெட் கூடுதலாக 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அறை வாடகை முன்பதிவுகள் வரும் 25-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    நடைபாதையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் விரைவில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் நேரடியாக வழங்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 24,208 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,843 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    Next Story
    ×