search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபரை தாக்கும் எம்எல்ஏ
    X
    வாலிபரை தாக்கும் எம்எல்ஏ

    என்ன வேலை செய்தீர்கள்? -கேள்வி கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.

    உட்கட்சி பூசலால் காங்கிரசில் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் அடங்காத நிலையில், தொகுதியைச் சேர்ந்தவரை எம்எல்ஏ தாக்கியது கட்சிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜோகிந்தர் பால், தனது தொகுதியில் கேள்வி கேட்ட வாலிபரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    பதான்கோட் மாவட்டம் போவா கிராமத்தில் மக்களிடையே காங்கிரஸ் எம்எல்ஏ ஜோகிந்தர் பால் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர், தொகுதியில் எம்எல்ஏ மேற்கொண்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவரை போலீஸ் அதிகாரி ஒருவர் அமைதியாக வெளியேற்ற முயன்றார். ஆனால், தொடர்ந்து எம்எல்ஏவுக்கு எதிராக பேசிய அந்த வாலிபர்,  நீங்கள் உண்மையில் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து அந்த வாலிபரை அருகில் வரும்படி அழைத்த எம்எல்ஏ, தன்னிடம் இருந்த மைக்கை கொடுத்தார். அவர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அடுத்த வினாடி, அந்த வாலிபரின் தலையில் எம்எல்ஏ பலமாக அடித்தார். அவருடன் சேர்ந்து மற்றவர்களும் பலமுறை தாக்கினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    உட்கட்சி பூசலால் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் அடங்காத நிலையில், இந்த சம்பவம் கட்சிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    எம்எல்ஏ இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கக்கூடாது. நாம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு சேவை செய்ய இங்கே வந்திருக்கிறோம் எனறு மாநில உள்துறை மந்திரி சுக்ஜிந்தர் சிங் கூறினார்.

    எம்எல்ஏவின் செயலை பாஜக மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். இது காங்கிரசின் சகிப்புத்தன்மையற்ற தன்மையைக் காட்டுவதாக பாஜக தலைவர் அமித் மால்வியா கூறி உள்ளார். வாலிபரை எம்எல்ஏ தாக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவைவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×