search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பை வென்ற விமானப்படை வீரர்கள்
    X
    கோப்பை வென்ற விமானப்படை வீரர்கள்

    முப்படைகளுக்கு இடையேயான 72வது கால்பந்து போட்டி- விமானப் படை அணி வெற்றி

    ராணுவம் சிகப்பு மற்றும் விமானப் படை அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் விமானப்படை அணி வெற்றி பெற்றது.
    கொச்சி:

    கொச்சியில் உள்ள மகாராஜா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முப்படைகளுக்கு இடையேயான 72-வது கால்பந்து போட்டி நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய கடற்படை, ராணுவம் சிகப்பு, ராணுவம் பச்சை மற்றும் இந்திய விமானப் படை ஆகிய அணிகள் பங்கேற்றன.

    கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை பிரிவின் சார்பாக சிக்னல் பள்ளியால் போட்டி நடத்தப்பட்டது. ராணுவம் சிகப்பு மற்றும் விமானப் படை அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் விமானப்படை அணி வெற்றி பெற்றது.

    இன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தெற்கு கடற்படை பிரிவின் தலைவர் ரியர் அட்மிரல் அந்தோனி ஜார்ஜ், விமானப்படை அணிக்கு கோப்பையை வழங்கியதோடு, இறுதி போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    சீனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2021-22-க்கான முப்படைகளின் கால்பந்து அணியை தேர்வு செய்வது இந்த போட்டியின் நோக்கமாகும்.
    Next Story
    ×