search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபிந்தர் கோயல்
    X
    தீபிந்தர் கோயல்

    இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம் - சோமேட்டோ நிறுவன தலைவர் டுவிட்

    இந்தி நாட்டின் தேசிய மொழி. அதை கற்றுக்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளரிடம் கூறிய விவகாரம் தொடர்பாக சோமேட்டோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.
    புதுடெல்லி:

    உணவு டெலிவரி செய்யும் சோமேட்டோ நிர்வாகம் இன்று ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்ட போது, பணம் திரும்பக் கிடைக்காது. உங்களால் இந்தியில் பிரச்சினையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.’
     
    இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள விகாஷ், கஸ்டமர் கேர் உடனான ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.

    சொமேட்டோ

    இந்நிலையில், இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம் என சோமேட்டோ நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியாவை நேசிப்பது போல் தமிழ்நாட்டையும் நேசிக்கிறோம். உணவு விநியோக நிறுவனத்தில் யாரோ ஒருவர் செய்த பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது.

    நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் பிராந்திய மொழி மற்றும் உணர்வுகளை பாராட்ட வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்த்துள்ளோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×