search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி விடுதி சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை
    X
    கல்லூரி விடுதி சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை

    கல்லூரி விடுதி சுவரில் படுத்து கிடந்த சிறுத்தை- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம்

    சிறுத்தை கல்லூரி வளாகத்திற்குள் நுழையாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள ஜீ பார்க், சிம்ஸ் ஆஸ்பத்திரியின் பின்புறம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெளியூர்களிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரி அருகிலேயே விடுதி கட்டப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் கல்லூரி மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    கொரோனா வைரஸ்

    இதனால் மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகள் மூடப்பட்டிருந்தன.
    கொரோனா
    பரவல் குறைந்ததையடுத்து. தற்போது விடுதி செயல்பட்டு வருகிறது.

    2 ஆண்டுகள் கல்லூரி மற்றும் விடுதி மூடப்பட்டு கிடந்ததால் வளாகங்கள் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் மாணவர்கள் நடமாட்டம் இல்லாததால் வனப்பகுதியை ஒட்டி கல்லூரி அமைந்துள்ளதாலும் வன விலங்குகள் கல்லூரி வளாகத்தில் நடமாடிக் கொண்டிருந்துள்ளது.

    இந்த நிலையில் கல்லூரி திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் மீண்டும் விடுதியில் தங்கியிருந்தனர். கடந்த மாதம் சிறுத்தை ஒன்று நள்ளிரவு கல்லூரி வளாகத்திற்குள் புகுந்தது. சிறுத்தையை கண்ட மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று மாணவிகள் விடுதியில் புகுந்தது. விடுதி கோட்டை சுவரில் படுத்து கிடந்தது. இதை மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விடுதி அறையை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர்.

    இதுகுறித்து விடுதி காவலாளிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் வருவதற்குள் சுவர் மீது உட்கார்ந்து இருந்த சிறுத்தை கீழே குதித்து வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றது.

    சிறுத்தை கல்லூரி வளாகத்திற்குள் நுழையாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×