என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேதாஜி, படேலுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை - அமித்ஷா
Byமாலை மலர்17 Oct 2021 2:58 AM GMT (Updated: 17 Oct 2021 2:58 AM GMT)
நேதாஜி, சர்தார் படேல் போன்ற புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு பல ஆண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
போர்ட்பிளேர்:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-
தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த தீவுகள் முக்கிய இடமாக விளங்கி இருக்கின்றன. ஏனெனில் 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கேதான் மூவர்ண கொடியை முதன் முதலாக ஏற்றினார். அத்துடன் 1945 வரை 2 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அரசிடம் இருந்து இந்த மண்ணை பாதுகாத்தார்.
ஆனாலும், நேதாஜியோ அல்லது விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை. புகழ்பெற்ற சில விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவியதுடன், நேதாஜியின் பிறந்த தினத்தை ‘வெற்றி தினம்' ஆகவும் அறிவித்தது.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இதையும் படியுங்கள்...விவசாயிகள் போராட்டக் களத்தில் நடந்த கொலை... நிஹாங் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது
Next Story
×