search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்ரிநாத் கோயில்
    X
    பத்ரிநாத் கோயில்

    நவம்பர் 20-ல் பத்ரிநாத் கோயில் நடை சாத்தப்படுகிறது

    உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்கியவுடன் சாத்தப்படும்.
    பத்ரிநாத்:

    குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில், நவம்பர் 20-ம் தேதி முதல் மூடப்படுவதாக சார்தாம் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது. மாலை 6.45 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோயில். கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் நவம்பர் மாதத்தில் மட்டும் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால், கோயில் நடை ஆண்டு தோறும் நவம்பர் மாதம் சாத்தப்பட்டு வருகிறது. குளிர்காலம் முடிந்த பின்னர், கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சார்தாம் யாத்திரை நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. அவ்வகையில் சார்தாம் யாத்திரையின் பிற கோயில்களான கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோயில்களில் நவம்பர் 6 ஆம் தேதியும், கங்கோத்ரியில் நவம்பர் 5 ஆம் தேதியும் நடை சாத்தப்படுகிறது.
    Next Story
    ×