search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கதிசக்தி திட்டம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை மேலும் மேம்படுத்த உதவும்: பிரதமர் மோடி பேச்சு

    நம் நாட்டில் உள்ள உள் கட்டமைப்பின் பொருள், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் முன்னுரிமையில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.


    கதிசக்தி திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    பிரதான் மந்திரி கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டம் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும், இது இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு 21-ம் நூற்றாண்டின் இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை அளிக்கும். அவர்களின் பாதையில் உள்ள தடைகளை நீக்கும்.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்கும் செயல்பாட்டை நாங்கள் வளர்த்தது மட்டு மல்ல. இன்று திட்டங்களை நேரத்துக்கு முன்பே முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இத்திட்டம் மூலம் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு இன்று அடித்தளமிடப்பட்டுள்ளது. இது பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

    நம் நாட்டில் உள்ள உள் கட்டமைப்பின் பொருள், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் முன்னுரிமையில் இருந்து வெகுதொலைவில் உள்ளது. இப்போது சில அரசியல் கட்சிகள் நாட்டுக்கு தேவையான கட்டுமானத்தை விமர்சிக்கத் தொடங்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    வளர்ச்சிப் பணிகளில் தாமதம் மற்றும் மந்தமான அணுகுமுறை காரணமாக வரி செலுத்துவோரின் பணம் கடந்த காலத்தில் அவமதிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டில் நாட்டில் 2 மெகா உணவு பூங்காக்கள் மட்டுமே இருந்தன. இன்று 19 மெகா உணவு பூங்காக்கள் உள்ளன. இதை 40 ஆக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் இன்று 1,280 பேருக்கு கொரோனா பாதிப்பு

    Next Story
    ×