search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    4 விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்- ஜனாதிபதியை நாளை ராகுல் காந்தி சந்திக்கிறார்

    லக்கீம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நாளை சந்திக்கிறார்கள்.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கார் மோதியது. இதைத் தொடர்ந்து வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதில் 4 விவசாயிகள் மற்றும் 2 பா.ஜ.க.வினர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி ஆசிஸ் மிஸ்ராவின் மகனை போலீசார் கைது செய்தனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    லக்கீம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நாளை காலை 11.30 மணியளவில் சந்திக்கிறார்கள்.

    அப்போது விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. லக்கீம்பூர் விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கண்டித்து இருந்தது.

    Next Story
    ×