search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 11,81,766 மாதிரிகளும், இதுவரை 58.50 கோடி மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    கடந்த மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 12,286 ஆக இருந்தது. மறுநாள் 15 ஆயிரத்தை நெருங்கியது. இதன் மூலம் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

    நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,996 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 5,692 ஆக இருந்தது.

    அதன்பிறகு சுமார் 6 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று குறைந்துள்ளது. இதே போல மகாராஷ்டிராவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக பாதிப்பு நேற்று 1,736 ஆக குறைந்துள்ளது.

    இந்த இரு மாநிலங்களில் தவிர மிசோரத்தில் 1,430, தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 1000-க்கும் குறைவாக உள்ளது.

    நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920 ஆக உயர்ந்தது.

    பாதிப்பை போல தினசரி பலி எண்ணிக்கையும் நேற்று வெகுவாக சரிந்துள்ளது. அதாவது கேரளாவில் 84, மகாராஷ்டிராவில் 36 பேர் உள்பட நேற்று 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,50,963 ஆக உயர்ந்துள்ளது.

    சமீப நாட்களாக தினசரி பாதிப்பை விட, நோயின் பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 26,579 பேர் நலம்பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57 ஆக உயர்ந்தது.

    தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 212 நாட்களில் இல்லாத அளவில் 2,14,900 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 12,447 குறைவு ஆகும்.

    தடுப்பூசி


    நாடு முழுவதும் நேற்று 65,86,092 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 95.89 கோடியாக உயர்ந்தது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 11,81,766 மாதிரிகளும், இதுவரை 58.50 கோடி மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×