என் மலர்

  செய்திகள்

  மெகபூபா முப்தி
  X
  மெகபூபா முப்தி

  ஜம்மு காஷ்மீரின் மோசமான நிலைக்கு பா.ஜ.க. அரசே காரணம் - மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்தாண்டில் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

  இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு எடுத்த தவறான நடவடிக்கைகளே ஜம்மு காஷ்மீரின் மோசமான நிலைக்குக் காரணம் என முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.  

  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பள்ளி முதல்வரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் மெகபூபா முப்தி. அப்போது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பா.ஜ.க. அரசே இதற்கு பொறுப்பு என தெரிவித்தார். 

  Next Story
  ×