search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி, ராகுல் காந்தி
    X
    சோனியா காந்தி, ராகுல் காந்தி

    காங்கிரஸ் செயற்குழு 16ம் தேதி கூடுகிறது... தலைவர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை

    காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று மூத்த தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும்  16 ஆம் தேதி காலை10 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், உள்கட்சி தேர்தல் நடத்துவது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    கபில் சிபல்

    கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேவை என்று மூத்த தலைவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி மோதல் வலுத்த நிலையில், தலைவர் பதவி மாற்றம், மாநிலத்தின் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சன்னி நியமனம், கட்சி தலைமை குறித்து கபில் சிபல் தெரிவித்த கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், 16 ஆம் தேதி நடைபெற உள்ள செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
    Next Story
    ×