search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சி
    X
    காங்கிரஸ் கட்சி

    லக்கிம்பூர் வன்முறை - காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

    உத்தர பிரதேச வன்முறையை கண்டித்து நாளை நாடு முழுதுமுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற்று நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வன்முறையால் பாதிப்பு அடைந்தவர்களின் குடும்பத்தின்ரை நேரில் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ்யாதவ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

    இதற்கிடையே, வன்முறை சம்பவம்  குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என உ.பி. அரசு அறிவித்துள்ளது. அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராஜிவ் சுக்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    லக்கிம்பூா் செல்லும் வழியில் சீதாபூரில் பிரியங்கா காந்தி மற்றும் தீபேந்திர ஹூடா சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பது அபாயகரமானதாக உள்ளது. இந்த வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×