search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா டிப்ரிவால் - மம்தா பானர்ஜி
    X
    பிரியங்கா டிப்ரிவால் - மம்தா பானர்ஜி

    பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    கடந்த 30ந்தேதி நடந்த இடைத்தேர்தலில் 57% சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    பாஜக

    பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டுள்ளார். இடைத்தேர்தலில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    பவானிபூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன.

    மேற்குவங்காளத்தின் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் மத்திய துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


    Next Story
    ×