search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    ஏழை மக்கள் தற்போது இலவசமாக சமையல் கியாஸ் பெறுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்

    முந்தைய ஆட்சியில் சமையல் கியாஸ் பெறுவதும், நிரப்புவதும் மிகவும் கடினமாக இருந்த நிலையில் தற்போது இலவசமாக கிடைக்கிறது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேசத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் கிடைக்கிறது எனக் கூறினார்.

    மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘முந்தைய ஆட்சிக்காலத்தில் சமையல் கியாஸ் கனெக்சன் பெறுவதும், கியாஸ் நிரப்புவதும் மிகவும் கடினம். ஆனால், தற்போது ஏழை மக்கள் இலவசமாக கியாஸ் கனெக்சன் பெறுகிறார்கள். தற்போது இருக்கும் மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகள் ஒவ்வொருவருக்காகவும் உழைக்கின்றன. கொரோனா தொற்றின்போது பிரதமர் மோடி நாட்டு மக்களின் உயிரை காக்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் உழைத்தார்.

    உத்தர பிரதேச அரசு மாத்ரிபூமி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த திட்டம் கிராம  செயலகம், சமுதாய நலக்கூடம் கட்டுவதை ஊக்குவிக்கும். பிரதமர் மோடி கிராமங்கள், ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு மதம், ஜாதி பாகுபாடு இன்றி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×